Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th March 2019 18:06:56 Hours

513 ஆவது படைப் பிரிவால் யாழ் மாணவர்களுக்கு 50 புதிய சைக்கிள்கள் பரிசளிப்பு

மாணவர் சமூதாயத்தினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் யாழில் இக்கட்டான பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் போக்குவரத்து நலன் கருதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51ஆவது படைப் பிரிவின் 513ஆவது படையணியால் அலுத்கடே நீதவான் நீதிமன்ற சட்டத் தரணிகள் சங்கத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இச் சங்கத்தினரால் புதிய 50 சைக்கிள்கள் பரிசளிக்கப்பட்டதோடு இவை கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (10) யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வானது 513ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் கணிஷ்க ஹெய்யந்துடுவ அவர்களின் ஒழுங்கமைப்பில் 51ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்தின அவர்களின் கண்காணிப்பில் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் பங்களிப்போடும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்போடும் இடம் பெற்றது.

கடந்த 2018ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகமானது 800 சைக்கிள்களை இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கு வழங்கி வைத்ததுடன் இவ்வாறான மனிதாபினமான செயற்திட்;டங்களை மேற்கொண்டு வந்துள்ளது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) இடம் பெற்ற இந் நிகழ்வில் நன்கொடையை வழங்கிய சட்டத்தரணியவர்களும் கலந்து கொண்டார். Best Sneakers | Air Jordan