25th November 2023 10:03:27 Hours
3வது இலங்கை கவச வாகன படையணி தனது 35வது ஆண்டு நிறைவு நிகழ்வினை 16 நவம்பர் 23 அன்று கலத்தேவ முகாம் வளாகத்தில் கொண்டாடியது. 3வது இலங்கை கவச வாகன படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் என்வீஏஎம் விதானகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.
நினைவு தினத்தை முன்னிட்டு, அநுராதபுரத்தில் உள்ள ‘அசோகா’ அனாதை இல்லத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுவதற்கு முன்னர், வீரமரணம் அடைந்த போர்வீரர்கள், காயமடைந்த போர்வீரர்கள் மற்றும் சேவையாற்றும் இராணுவ வீரர்களுக்கு ஜெயஸ்ரீ மஹா போதி வளாகத்தில் மத ஆசிகள் வழங்கப்பட்டன.
ஆண்டு நிறைவு நாளில் கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டில் விளையாட்டு மற்றும் இதர செயல்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. ஆண்டு நிறைவு தினத்தை குறிக்கும் வகையில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடுவதற்கு அழைக்கப்படுவதற்கு முன்னர் கட்டளை அதிகாரி படையினருக்கு உரையாற்றினார்.
அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரத்துடன் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நிறைவடைந்தது.