Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2022 15:57:37 Hours

211 வது பிரிகேட் படையினரின் முன்முயற்சியில் கஸ்ட பிரதேச கிராமங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் மண்வெட்டி வழங்கல்

மதவாச்சி, லிந்தவெவ மற்றும் காபிரிக்கம பிரதேசங்களில் விவசாய சமூகங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அனுபவிக்கும் சிரமங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது படைப்பிரிவின் 211 வது காலாட் பிரிகேட் படையினரால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 200 உலர் உணவுப் பொதிகள் மற்றும் விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 50 மண்வெட்டிகள் சனிக்கிழமை (26) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காபிரிக்கம ஆரம்ப பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்.

211 வது காலாட் பிரிகேடின் வேண்டுகோளுக்கு இணங்க, சிங்கப்பூரில் வசிக்கும் பௌத்த துறவி வண. சுமன தேரர் மற்றும் கடவத்தை ‘சரண’ அறக்கட்டளையின் தலைவி திருமதி சுனில் விஜயவர்தன ஆகியோர் இத் திட்டத்திற்கு அனுசரணை வழங்கினர்.

2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, 14 வது இலங்கை பீரங்கி படையின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 211 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி மற்றும் 211 வது காலாட் பிரிகேடின் சிப்பாய்கள் இந்த சமூகம் சார்ந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.