Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2019-கரம் சம்பியன்ஷிப் போட்டியில் இ.சி.படையணி மற்றும் இ.இ.மகளிர் படையணி வெற்றி

படைகளுக்கு இடையில் இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான கரம் சம்பியன்ஷிப் போட்டியானது; 14 படையணிகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் பங்களிப்புடன், இலங்கை சமிக்ஞை படையணியின் மத்திய வளாகத்தில் இம்மாதம் 23-26 ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

இவ் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவனது பிரதம அதிதியான இலங்கை இராணுவ பொது நிருவாக பிரதாணி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிரி அவர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றது.

மேலும், விளையாட்டு துறை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க, மத்திய படைத் தளபதிகள், மற்றும் விளையாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இப்போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்களை ஊக்குவிக்குமுகமாக கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான இறுதி சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சிங்கப் படையணிச் சேர்ந்த கரம் விளையாட்டுக் குழுவானது, விஜயபாகு காலாட் படையணியை வெற்றி கொண்டு சம்பியன்ஷிப்பை சுவீகரித்துக்கொண்ட அதேவேளை, பெண்களுகிடையிலான இடம்பெற்ற போட்டியில் 3இலங்கை இராணுவ மகளிர் படையணியானது சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதோடு, 5இலங்கை இராணுவ மகளிர் படையணியானது இரண்டாம் இடத்தினை தக்கவைத்து கொண்டது.

இலங்கை பொறியியல் படையணியைச் சேர்ந்த வீரர் பி.எல்.சி. மதுசங்க மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த மகளிர் வீராங்கனை எச்.எ.எஸ்.சடமாலி ஆகியோர் சிறந்த வீரர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இலங்கை பொறியியல் சேவை படையணியைச் சேர்ந்த கோப்ரல் கே.டப்ல்யூ..டி. சுசந்த போட்டியின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.latest Running Sneakers | Nike SB