13th February 2024 13:45:25 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் 20 வது கஜபா படையணியின் படையினர் புல்மோட்டை பரணமதவச்சி வித்தியாலயத்தின் 99 மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் பாடசாலை உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், இசைக்கருவிகள் மற்றும் முதலுதவி பெட்டிகளை 2024 பெப்ரவரி 06 ஆம் திகதி நன்கொடையாக வழங்கினர்.
கொழும்பைச் சேர்ந்த அனுசரனையாளரான திருமதி பீ கொரதொட்ட அவர்களின் நிதியுதவி மற்றும் 221 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலுக்கமைய படையினரால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது
இந்நிகழ்வில் 221 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 20 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.