12th April 2024 16:34:43 Hours
15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி 2024 ஏப்ரல் 07 அன்று மொல்லிப்பொத்தானை ஹமீடியா விளையாட்டுக் கழகத்தில் இப்தார் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் கருத்தின் படி இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியிலுள்ள பள்ளிவாசல்களின் குழு ஒன்று இணைந்து இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கியது.
இந்நிகழ்வில் பிரதேசத்திலுள்ள மதத் தலைவர்கள், 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி, தம்பலகமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இஸ்லாமிய பக்தர்கள் கலந்துகொண்டனர்.