20th February 2024 16:05:37 Hours
144 வது காலாட் பிரிகேட் அதன் 11வது ஆண்டு நிறைவு விழாவை 144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.கே.டி.பீ. மாபலகம பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கொண்டாடியது.
ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு, படையினர் ஆறு அணிகள் பங்குபற்றிய கிரிக்கெட் போட்டியை நடாத்தினர். மேலும் 2024 ஜனவரி 30 ஆம் திகதி பல நன்கொடையாளர்களின் பங்கேற்பில் ஸ்ரீ சாந்தி யோகாஷ்ரமத்தில் இரத்த தானமும் வழங்கப்பட்டது.
ஆண்டு நிறைவு நாளில், பிரிகேட் தளபதிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். களனி விகாரையில் நடைபெற்ற விசேட போதிபூஜையுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.