Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2022 18:27:51 Hours

141 வது பிரிகேட் படையினர் கம்பஹா மாவட்டத்தில் மேலும் 1500 பேருக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 14 வது படைப்பிரிவின் 141 வது பிரிகேட் படையினரின் ஆதரவுடன், வண. தலகல சுமணரதன நாயக்க தேரரின் தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை, மற்றும் சிங்கப்பூர் டான் நாகாக் & கீ மெங் லெங் பவுண்டேஷன் நிறுவனத்தின் நன்கொடையாளர்களுடன் இணைந்து கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய, தெல்கொட, நிட்டம்புவ மற்றும் கன்டளம பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறும் 1500 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

சுமார் 2.2 மில்லியன் ரூபா செலவிலான அனுசரணை வழங்கப்பட்ட பொருட்களில் அரிசி, பருப்பு, சோயா மீட், உப்பு, மசாலாப் பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நிவாரணப் பொதிகள் ஒவ்வொன்றும் 1500 ரூபா பெறுமதியான பொருட்கள் திங்கட்கிழமை (27) மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 14 வது படைப்பிரிவின் 141 வது பிரிகேட் படையினர்களால் விநியோகம் செய்யப்பட்டன.

141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே இத்திட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்தார். மேலும் தகுதியான குடும்பங்களைத் தெரிவு செய்யும் பணியானது அந்தந்த பிரதேசங்களில் விநியோகிப்பதற்கான இடங்கள் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் 141 வது பிரிகேட் தலைமையகத்துடன் இணைந்து அந்தந்த கிராம சேவை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் பின்னணியான தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளையின் வண தலகல சுமணரதன நாயக்க தேரர், 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே, பியகம பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர், மேல்மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், கட்டளை அதிகாரிகள், பிரிவு தளபதிகள், 141 பிரிகேட் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் விநியோக திட்டத்தில் பங்குபற்றினர்.