Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th March 2019 13:01:26 Hours

14 விஜயபாகு படையணியிரனால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

புதுமதலன் பிரதேச முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு ஊனமுற்ற பிள்ளையினது தேவைகருதி பாடசாலை உபகரணங்கள் மற்றும் சக்கர நாற்காலியானது, முல்லைத்தீவு 68 வது படைப்பிரிவின் 681 வது படையிலுள்ள 14 விஜயபாகு படையணியிரின் அனுசரணையுடன் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இவ்வுதவியானது வல்லைமடம் மற்றும் புதுமதலன் அம்பலவன்பொக்கனை முன்பள்ளியைச்சேர்ந்த 20 மாணவர்களின் கஷ்ட்ட நிலமையைக் கருத்திற்கொண்டு 14 விஜயபாகு படையணியிரின் அனுசரணையுடன் 681 வது படையின் படைத்தளபதி சி.எஸ். முணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்டன.

மேலும், கடந்த புதன் கிழமையன்று (13) 681 வது படைத் தளபதியின் தலைமையில் வல்லைமடம் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு ஊனமுற்ற பிள்ளைக்கான சக்கர நாற்காலியானது வழங்கப்பட்டன.

வல்லைமட செப்பமளி தேவாலய ஆயர், முல்லிவாய்க்கால் மேற்கு கலவன் பாடசாலை அதிபர், மூத்த பிரதேசவாசிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இவ்வன்பளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். Sportswear free shipping | Shop: Nike