09th May 2021 18:27:19 Hours
எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கைகயில் அதிகரிப்பு ஏற்படும்விடத்து அதற்கு முகம் கொடுக்கும் வகையில் ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பலாங்தொட்ட வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் ஹம்பாந்தோட்டை 12 வது படைப்பிரிவின் 122 வது பிரிகேட் படையினர் ஹம்பாந்தோட்டை பிராந்திய வைத்தியசாலையின் மூன்று விடுதிகளை கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களாக வெள்ளிக்கிழமை (7) மாற்றினர்.
கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 122 வது பிரிகேட் தளபதி ஜனக்க பல்லேகும்புரவின் ஒருங்கிணைப்பில் இந்த மூன்று விடுதிகளும் கொவிட் -19 நோயாளிகளுக்கான இடைநிலை பராமரிப்பு நிலையங்களாக மாற்றப்பட்டன.