Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th January 2024 15:22:43 Hours

12 வது காலாட் படைப்பிரிவினர் மற்றும் கோணகங்கார பொலிஸாரால் 1500 கிலோ கஞ்சா அழிப்பு

இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கமைய ஹம்பாந்தோட்டை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவு படையினர் மற்றும் கோனகங்கார பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து ஜனவரி 18 ஆம் திகதி யால சுகந்திபுரம் பகுதியில் 1500 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

பின்னர் கைப்பற்றப்பட்ட கஞ்சா அனைத்தும் அந்த இடத்தில் அழிக்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் கோணகங்கார பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.