06th December 2021 15:58:07 Hours
அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் பணிக்கப்பட்ட தேசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டமான ‘கம சமக பிலிசந்தரக்’ திட்டத்தில் ஈடுபட்ட 12 வது களப் பொறியியல் படைப்பிரிவின் படையினர் எட்டு விளையாட்டு மைதானங்களின் புனரமைப்புப் பணிகளை நிறைவுசெய்திருந்ததோடு இறுதியாக புனரமைக்கப்பட்ட வலல்லாவிட்ட கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை நவம்பர் 24 ஆம் திகதி மாணவர்களிடம் கையளித்தனர்.
2021 ஜனவரி 23 அன்று வலல்லாவிட்ட கிராமத்தில் நடைபெற்ற 7 வது ‘கம சமக பிலிசந்தரக்’ நிகழ்ச்சியின் போது களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் 08 விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் பணி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
12வது களப் பொறியாளர் படையணி சிப்பாய்களினால் அந்த மறுசீரமைப்பு திட்டம் நிறைவு செய்யப்பட்டிருந்ததோடு, இது பாடசாலை மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பிற்காக பெரிதும் பயனளிக்கும்.
தலைமை களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொறியியலாளர் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அசங்க பெரேரா மற்றும் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் சிப்பாய்களால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.