Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2024 15:44:57 Hours

112 வது காலாட் பிரிகேடின் 73 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

112 வது காலாட் பிரிகேட் அதன் 73 வது ஆண்டு நிறைவை 2024 ஜனவரி 30 அன்று 112 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூஏஜே ஹேமச்சந்திர ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

ஆண்டு நிறைவன்று, இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய படையினரால் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அன்றைய நிகழ்ச்சி நிரலில் படையினருக்கான உரையும், அதைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு விருந்தும் இடம் பெற்றது.

112 வது காலாட் பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.