Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2024 17:30:09 Hours

11 வது விஜபாகு காலாட் படையணியின் 17வது ஆண்டு நிறைவு விழா

11 வது விஜபாகு காலாட் படையணி தனது 17 வது ஆண்டு நிறைவு விழாவை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 07) 11 வது விஜபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.

செல்வசந்தி கோவிலில் அன்னதானம் மற்றும் போதிபூஜை உள்ளிட்ட மத அனுஷ்டானங்கள் நடைபெற்றதுடன், படையணியில் கரப்பந்து போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்டு நிறைவு நாளில் கட்டளை அதிகாரியை கௌரவிக்கும் வகையில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை நடாத்தப்பட்டது.

11 வது விஜபாகு காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.