13th February 2024 18:04:25 Hours
11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர் கொக்கட்டிச்சோலை பிரதேச விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கறவை மாடுகளை 2024 பெப்ரவரி 11 ஆம் திகதி 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி வளாகத்தில் வழங்கினர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 243 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.எம்.சி.எஸ் குமாரசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் ஒருங்கிணைப்பில் கொழும்பு 07 இல் உள்ள சர்வதேச விபாசன பவன நிலையத்தின் திரு.விதுர ரணசிங்க அவர்களின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட ஆறு விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.