Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2023 19:03:52 Hours

11 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் கள விஜயம்

11 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 2023 டிசம்பர் 12 அன்று 112 வது காலாட் பிரிகேட் முகாமுக்கும் 2 வது இலங்கை ரைபிள் படையணி முகாமுக்கும் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

112 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டப்ளியூஎம்எல்எஸ் தயாவன்ஷ அவர்கள் படையினருக்கான உரைக்கு முன்னர் வருகை தந்த தளபதி அவர்களை அன்புடன் வரவேற்றார்.

அதனை தொடர்ந்து 2 வது இலங்கை ரைபிள் படையணி முகாமிற்கு தளபதி விஜயம் செய்ததுடன் அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரீபேப் கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் சிப்பாய்களுக்கான குளியல் அறை மற்றும் புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்தார்.

தளபதி 11 வது காலாட் படைப்பிரிவு படையினருடன் உரையாற்றுகையில் தனது நோக்ககூற்றினையும் முன்வைத்தார். நினைவு சின்னமாக 2 வது இலங்கை ரைபிள் படையணி முகாம் வளாகத்தில் மாங்கன்று ஒன்றை நடுவதற்கு வருகை தந்த தளபதி அழைக்கப்பட்டார்.