15th February 2024 12:03:18 Hours
56 வது காலாட் படைப்பிரிவிலிருந்து வெளிச்செல்லும் 56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி அவர்களுக்கு 12 பெப்ரவரி 2024 அன்று 56 வது காலாட் படைப்பிரிவில் படையினர் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை அளித்தனர்.
வருகை தந்த வெளிச்செல்லும் காலாட் படைப்பிரிவின் தளபதிக்கு படைப்பிரிவின் படையினர் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கினர்.
பின்னர், வெளிச்செல்லும் காலாட் படைப்பிரிவின் தளபதி அனைத்து அதிகாரிகளுடன் குழு படங்கள் எடுத்துக் கொண்டதுடன், படையினருக்கான உரையின் போது, தனது பதவிக்காலத்தில் படையினர் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் படைப்பிரிவின் பிரதித் தளபதி, பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.