Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2017 20:43:22 Hours

வுஷூ விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இராணுவ வீரர்

ரஷ்யாவில் இடம் பெற்ற 14ஆவது சர்வதேச வூஷூ விளையாட்டில் இலங்கை இராணுவ வீரரான கோப்ரல் லக்ஷ்மன் குணசேகர அவர்கள் ஆண்களுக்கான சந்த 48 கிலோ விளையாட்டில் தமது திறமையை வெளிக்காட்டி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இப் போட்டியானது 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி வரை இடம் பெற்றது.

மேலும் இப் போட்டியில் 39 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட போட்டியளார்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் போட்டி நிறைவில் கடந்த வியாழக் கிழமையன்று (05) தமது தாய் நாட்டிற்கு திரும்பிய இப் படை வீரரை இராணுவ வுஷூ விளையாட்டு கழகத்தின் உயர் அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேத விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

அந்த வகையில் இலங்கை இராணுவ வுஷூ விளையாட்டு கழகத்தின் பணிப்பாளராக பிரிகேடியர் பிரபாத் தெமடம்பிடிய காணப்படுகிறார்.

Nike air jordan Sneakers | UOMO, SCARPE