Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2023 09:47:27 Hours

விளையாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

கஜபா படையணியின் பிரிகேடியர் ஜிஏடி கொடேவத்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பனாகொட விளையாட்டுப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக புதன்கிழமை (நவம்பர் 29) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சுருக்கமான மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய பணிப்பாளர், புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித் பாராயணத்திற்கு மத்தியில், அதிகாரபூர்வ பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

இப் பதவியினை வகித்த மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் தற்போது 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் ஜிஏடி கொடேவத்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் முழு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகவும், இந்த நியமனத்திற்கு முன்னர் மைட்லாண்ட் பிளேஸ் நான்கு மாடி பல வசதி வளாகத்தின் திட்ட அதிகாரியாகவும் பணியாற்றினார்.

மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டுப் பணிப்பாளர், தனது பணி மற்றும் கடமைகளை நிர்ணயித்து, படையினருக்கு உரையாற்றினார் மற்றும் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்துக்கு முன் வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.

விளையாட்டு பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.