Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

07th August 2019 18:21:41 Hours

விமானப்படைத் தளபதி இராணுவ தளபதியை இராணுவ தலைமையகத்தில் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதியான எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் இம் மாதம் (01) ஆம் திகதி சந்தித்தார்.

இராணுவ தளபதியின் அழைப்பையேற்று வருகை தந்த விமானப்படைத் தளபதியை இராணுவ தலைமையக பட்டாலியன் கிளையின் கட்டளை அதிகாரி கேர்ணல் பிரதீப் கமகே அவர்கள் வரவேற்றார். பின்னர் விமானப்படைத் தளபதிக்கு இராணுவ படைக்கலச் சிறப்பணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.

அணிவகுப்பின் நிறைவின் போது விமானப்படைத் தளபதியை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்கள் வரவேற்று இராணுவ தளபதியின் பணிமனைக்கு அழைத்துச் சென்றார்.

அச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதி அவர்கள் விமானப்படைத் தளபதியை மனப்பூர்வமாக வரவேற்று இராணுவ தலைமையகத்திலுள்ள உயரதிகாரிகளை விமானப்படைத் தளபதிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் இராணுவ தளபதி மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு இடையிலான கருத்துகள் தொடர்பான விடயங்கள் பரிமாறப்பட்டு பின்னர் விமானப்படைத் தளபதி மற்றும் இராணுவ தளபதி இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சின்னங்கள் இருவருக்குமிடையில் கைமாற்றி கொள்ளப்பட்டன. இறுதியில் விமானப்படைத் தளபதியினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் நினைவு புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வா, இராணுவ சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்ஜய முனசிங்க, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன, சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாரச்சி, நிதி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் துமிந்த சிறிநாக, பொறியியல் பிரதானி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார, பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் A M R தர்மசிறி, மாஸ்டர் ஜெனரல் போர்கருவி மேஜர் ஜெனரல் குமா பீரிஸ், இராணுவ செயலாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.