Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st December 2018 16:07:11 Hours

விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நத்தார் நிகழ்வு

போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தில் நத்தார் கெரோல் நிகழ்வு (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் வருகை தந்தார். இவரை இப்படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் சிறிநாத் ஆரியசிங்க அவர்கள் வரவேற்றார்.

பண்ணிப்பிடிய பமுனுகம் புனித நிகலஸ் தேவாலயத்தின் குழுவினர் இந்த நத்தார் நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டனர். மேலும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் இணைந்திருந்தனர். trace affiliate link | New Releases Nike