Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

08th August 2019 13:57:43 Hours

விசேட படையணியினருக்கான புதிய கட்டிட தொகுதி திறந்து வைப்பு

வவுனியாவில் அமைந்துள்ள 23 ஆண்டு பழைமையான இலங்கை இராணுவ 3விசேட படையணி தலைமையகத்தில் கடந்த (07) ஆம் திகதி ஆழ ஊடுருவும் படையணி அருங்காட்ச்சியம், நவீன விரிவுரை மண்டபம் மற்றும் முதன் முதலாக நவீன உபகரணங்களின் மூலம் அமைக்கப்பட்ட நிலக்கீழ் துப்பாக்கி சூட்டு பயிற்சி மையம் உள்ளடங்களான திறன் மேம்பாட்டு பயிற்சி கட்டிட தொகுதியானது திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பரதம அதிதியாக கலந்து கொண்ட விசேட படையணியின் படைத் தளபதியும் இராணுவ தளபதியமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் சர்வதேச தரத்திலான புதிதாக நவினமயமாக்கப்பட்ட புதிய வசதிகளை கொண்ட இக் கட்டிடத் தொகுதியினை திறந்து வைத்தார்

இராணுவத் தளபதியின் ‘தந்திரோபாய கோப்ரல்’ எனும் எண்ணக்கருவிற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், இராணுவ பயிற்சியில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்கப்படுகின்றது. இக்கட்டிடத்தின் வேலைத்திட்டமானது 3விஷேட படையணியின் கட்டளை அதிகாரியவர்களின் மேற்பார்வை மற்றும் 3விஷேட படையணியின் முன்னயை கட்டயை அதிகாரியும் தற்போதய புதிய 3விஷேட படையணியின் தளபதின் வழிகாட்டுதலின் ஊடாக பூர்த்தி செய்யப்பட்டது.

மேலும், படையினர்களுக்கு மத்தியில் கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள், விஷேட படையணியினரால் ஆற்றிவரும் பொறுப்பு மற்றும் அர்பணிப்பு பற்றி குறிப்பிட்டதோடு இப்புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நிலக்கீழ் துப்பாக்கி சூட்டு பயிற்சி மையம் மற்றும் ஏனைய பகுதிகள் மூலம் படையினரின் தொழில் தரமானது மேலும் விருத்தியடையும் என்று கூறினார்.

‘’கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னரான இராணுவத்தின் விரைவான தலையீட்டினால் நிலைமை கட்டுப்பாட்டிட்குள் கொண்டுவரப்பட்டமையானது இராணுவத்தின் உயர் தரம் மற்றும் அவற்றுக்கான உலக அங்கிகாரமானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் மக்கள் நம்மீதான நம்பிக்கையை வைத்துள்ளனர்’’ என இராணுவ தளபதி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி பாதுகாப்பு சூழ்நிலை சம்பந்தமாக விளக்கமளிக்கையில் கடந்த கால போர் முணையில் எதிர் கொண்ட அச்சுறுத்தலை விட இது ஒரு வித்தியாசமான அச்சுறுத்தலாகும் மற்றும் இது ஒரு மறைமுகமான அச்சுறுத்தலானதால் இவற்றைக் இனங்கண்டு கொள்வதானது கடினம் என்று தெரிவித்தார்

‘’நவீன தொழில் நுட்பத்திற்கமைய எங்களுடைய புலனாய்வு நடவடிக்கையை தற்போதைய பாதுகாப்பு நிலைமைக்கேற்ப வலிமைபடுத்தியுள்ளோம்’’ என்று தளபதியவர்கள் மேலும் குறிப்பிட்டார். இதனடிப்படையில் ஆணை பெறாத அதிகாரிகளுக்கான அதிகாரங்களை வழங்கி வலிமையான தந்திரோபாய இராணுவமாக மாற்றியமைக்கும் நிமித்தம் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏதிர்காலத்தில் இராணுவமானது தந்திரோயாயங்களைக் கையாண்டு கொள்ளுமுகமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்ட விதிமுறைகளை வழங்குவது அவசியமாகும் என குறிப்பிட்டார்.

இராணுவத்தினர் இராணுவத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தாத வகையில் எவ்வாறு சிவில் சமூகத்துடன்; தொடர்புகளை பேனவேண்டும் என பயிற்றுவிக்கப்படவேண்டும், மேலும் எமது கவனயீனம்; அறியாமை மற்றும் சில குறித்த நடவடிக்கை மூலம் சர்வதேச மற்றும் நாடாளாவியரீதியாக எம்மீதுள்ள நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளன. மேலும் இதயபூர்வ மற்றும் புத்தியுடன் செயற்படும் இராணுவத்தினரே எங்கள் நாட்டுக்குத் தேவையென மேலும் தளபதியவர்கள் தெரிவித்தார்.

மேலும் தனது உரையில் ஏற்கனவே விஷேட படையணிக்கு வழங்கபபட்ட நலன்புரி திட்டமானது தம்பதிய புதிய வீடமைப்பு திட்டம், கொழும்பு வதிவிட மாடி கட்டிடம், வாடகை கொடுப்பனவு அதிகரிப்பு, படையினர்களுக்கான ஏனைய சலுகைகள் போன்றவற்றில் தாக்கத்தை செலுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

அதனைத் தொடந்து, அங்கு வருகைதந்த இராணுவ தளபதி இராணுவத்தினருடைய புதிய கண்டுபிடிப்புக்கள் மூலம் நாட்டினுடைய அந்நிய செலாவாணியானது அதிகரிக்கின்றன என்று குறிப்பிட்டதோடு, ஐக்கிய நாட்டு சமாதான பணிகளுக்காக தங்களது படைகளை வழங்குவதன் மூலமும் முப்படையினருக்கான உணவு சலுகைகளை வழங்குவதன்னூடாகவும் வெற்றியடைந்துள்ளோம் எனவும், புதிய கண்டுபிடிப்பு பொருட்களை வெளிநாடுகளில் காட்சிபடுத்த சந்தர்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இராணுவத்தின் நன்மதிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவத்தினால் செயற்படுத்தப்படும் பெரிய திட்டங்களில் ‘’ துருலிய வெனுவென் அபி’’ எனும் திட்டமானது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளதுடன், மஹரகம அபேக்க்ஷ புற்று நோய் வைத்தியசாலை, அயாட்டி நிலையம், மெத்சிரி செயன சிறுநிரக திட்டம் போன்றவற்றிட்கான தொழில் நுட்ப உதவிகளை வழங்கியதோடு, சிறுவர்களுக்கான இருதய சிகிச்சை திட்டத்திற்காக 70 மில்லியன் ரூபா வழங்கிமையானது மேலும் இராணுவத்தினரது நன்மதிப்பை உயர்வடையச் செய்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிரகாரம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப் பொருள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து தனது இறுதி உரையில் இராணுவம் எதிர் நோக்கும் வீதி விபத்தினை குறைவடையச் செய்யவேண்டும் என்று தெரிவித்ததோடு, கடந்த ஆறு மாத கலத்திற்குள் 17 இராணுவத்தினர் மரணித்துள்ளதுடன் 138 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்சியில் வன்னி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெணரல் ஜகத் குணவர்தன, சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெணரல் என்.எம். ஹெட்டியாராச்சி, விஷேட படையணித் தலைமையகத்தின் கட்டளை தளபதி, 211ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர்கள் கலந்து கொண்டனர்.