Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th August 2019 20:12:55 Hours

வட்டடுக்கோட்டை குளத்து நீருடன் புனித நீர் கலப்பு

வட்டுக்கோட்டை செட்டியார்மடத்தில் உள்ள பெரியதம்பிரான் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் பழைமை வாய்ந்த குளத்து நீருடன், இந்தியாவின் காசி கங்கை நதியில் (வாரனாசி கங்கை நதி) இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை சேர்கும் சமய கிரிகை நிகழ்வானது, கடந்த (14) ஆம் திகதி வியாழக்கிழமை இந்து மற்றும் பௌத்த பிரமுகர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றன.

இக் காசி நதியின் நீரானது, யாழ் நண்பர்கள் மற்றும் சமூக சேவையாளர்களின் தலைவரான டொக்டர் சிதம்பரம்மோகன் அவர்களினால், யாழ் ஸ்ரீ நாக விகாரையின் பிரதான பௌத்த மதகுருவான மீகஹஜன்துர சிரிவிமல தேரர் அவர்களின் உதவியுடன் கொண்டுவரப்பட்டது.

இந்த நிகழ்வானது பௌத்த மற்றும் இந்து மத தலைவர்கள் ,யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய, டொக்டர் சிதம்பரம்மோகன் , யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பிரதிநிதி திரு.எஸ் நிறஞ்சன், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இடம் பெற்றன.

மேலும் இந்த புணித நீரானது இந்தியாவில் பௌத்த மற்றும் இந்து மக்கள் இணைந்து தரிசிக்கும் இடமான வரனசிக்கு விஜயத்தை மேற்கொண்ட பௌத்த மத குரு ஸ்ரீவிமல தேரர் மற்றும் டொக்டர் சிதம்பரமேகன் அவர்களினால் இங்கு கொண்டு வரப்பட்டன. கொண்டு வரப்பட்ட இந்த நீரானது இந்து சம்பிரதாய முறை மற்றும் பௌத்த செத்பிரித் பூஜையின் பின்னர் செட்டியார்மட குளத்து நீருடன் சேர்கப்பட்டது. spy offers | Air Jordan Release Dates 2020