Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2024 19:19:13 Hours

யாழ் மற்றும் கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொந்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்பிள்யூபீ மற்றும் இரண்டு பார்கள் ஆர்எஸ்பீ மற்றும் பார் யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (முலோபாய கற்கை - சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கை) எம்ஜிடி எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கை) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்கள் 28 நவம்பர் 2024 அன்று யாழ், கிளிநொச்சி மற்றும் 52 வது காலாட் படைபிரிவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

கற்கோவளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மதிப்பீடு செய்த அவர், கற்கோவளம் மெதடிஸ் தமிழ் கலவன் பாடசாலை இடம்பெயர்ந்தோர் நிலையத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கினார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தவும், பாதிப்பைக் குறைக்கவும், மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த விஜயத்தைத் தொடர்ந்து யாழ்.மாவட்டச் செயலகத்தில் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால ஆயத்தங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொது நிர்வாகம் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.