20th February 2024 12:50:14 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீஎஸ்எம் சார்ள்ஸ் அவர்களை 2024 பெப்ரவரி 19 ம் திகதியன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, யாழ் மற்றும் கிளிநொச்சியில் நிலவும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக யாழ் தளபதி வடக்கு மாகாண ஆளுநருக்கு விளக்கினார். பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் திறன்களை மேம்படுத்துவது, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த நிதி ரீதியாக உதவுவது குறித்தும் ஆளுநர் தனது கருத்தை தெரிவித்தார். மேலும், கலந்துரையாடலின் போது, இரு தரப்பினரும் நலன்புரி, மக்களின் நல்வாழ்வு மற்றும் யாழ் குடாநாட்டில் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் போது பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் கேஜேஎன்எம்பீகே நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, 512 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.