19th February 2024 13:47:24 Hours
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 16 பெப்ரவரி 2024 அன்று பலாலி இராணுவ தள வைத்தியசாலைக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூஏஎன்சி விஜயசிங்க அவர்கள் வருகை தந்த யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியை இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மரியாதையுடன் வரவேற்றார்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி தனது விஜயத்தின் போது வைத்தியசாலையை பார்வையிட்டதுடன், மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தார். மேலும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நலம் விசாரித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
அங்கு அவர் ஆற்றிய உரையின் போது பல சிக்கல்களுக்கு மத்தியில் அவர்களின் சேவையைப் பாராட்டினார். இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.