20th December 2023 21:58:13 Hours
4 வது இலங்கை சிங்க படையணி, 52 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 521 வது காலாட் பிரிகேட் படையினர் 2023 டிசம்பர் 16 அன்று பருத்தித்துறை யாழ்ப்பாணம், புலோலி (கிழக்கு) அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இராணுவத்தினரின் கோரிக்கையின் பேரில் கொழும்பு ஹார்பர் லிமிடெட் நிறுவத்தின் உபகரணப் பிரிவின் அனுசரணையுடன் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை முன்னெடுத்தனர்.
அந்த பிள்ளைகள் அடுத்த ஆண்டிற்குதேவையான பயிற்சி புத்தகங்கள், எழுதுபொருட்கள், பாடசாலை பைகள், காலணிகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளைப் பெற்றனர்.
இது தவிர, பாடசாலை சிறுவர் பூங்காவை சீரமைத்து, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் தூய்மையக்கள் உபகரணங்களை பாடசாலைக்கு நன்கொடையாளர்கள் வழங்கினர்.
கொழும்பு ஹார்பர் பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த திரு எச்.எம் மென்டிஸ் மற்றும் பணிமனை பொறியியலாளர் திரு எம். ஏ முனசிங்க தலைமையிலான குழுவினர் இவ் வழங்கல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.