Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

07th October 2019 12:40:39 Hours

யாழ் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 51, 52 மற்றும் 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வுகள் யாழ் குடா நாட்டில் இம் மாதம் (5) ஆம் திகதி இடம்பெற்றன.

51 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் அனுசரனையில் யாழ் பழைய பூங்கா வளாகத்தினுள் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

52 ஆவது படைப பிரிவின் ஏற்பாட்டில் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி வளாகத்தினுள் சித்திர போட்டிகள் மற்றும் கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றன. அத்துடன் 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சித்திர போட்டிகள் 128 இளம் சித்திர கலைஞர்களின் பங்களிப்புடனும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு விளையாட்டு (கேம்ஷ்) பருத்திதுறை ஹாட்லி கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

சிறுவர் தின நிகழ்வு போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டு வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு யாழ் படைத் தளபதி அவர்களினால் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சேன வடுகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 521 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் தொண்டமனாறு மற்றும் வல்வெட்டிதுறை பிரதேசங்களில் இம் மாதம் (5) ஆம் திகதி இடம்பெற்றன. இந்த நிகழ்வுகள் கேரைதீவு இந்து கலவன் பாடசாலை வளாகத்தினுள் சிறுவர்களுக்கான சித்திர போட்டிகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வுகளில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்திருந்தனர்.