Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th February 2024 12:02:00 Hours

யாழ் அரச அதிகாரிகள் புதிய யாழ் தளபதியை வரவேற்பு

யாழ் மாவட்டச் செயலாளர் திரு.ஏ.சிவபாலசுந்தரன், ஜனாதிபதி வடமாகாண மேலதிக செயலாளர் திரு.ஐ.இளங்கோவன் மற்றும் சில அரச அதிகாரிகள் புதிய யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை 14 பெப்ரவரி 2024 அன்று யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, அரச அதிகாரிகள் புதிய தளபதிக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், சமூக உறவுகளுக்கும் இராணுவத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். யாழ் குடாநாட்டில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள், பல்வேறு நன்கொடை திட்டங்கள் மற்றும் யாழில் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் போன்ற முயற்சிகளை அவர்கள் பாராட்டினர்.

கலந்துரையாடலின் போது யாழ் மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார வளர்ச்சியை முன்னேற்றுவதில் மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் யாழில் படைப்பிரிவு தளபதி மற்றும் பிரிகேட் தளபதியாக இருந்த பதவிக்காலத்தில் நற்சிந்தனை மற்றும் கூட்டுறவு உறவை வளர்த்ததற்காக அரச அதிகாரிகள் அவரைப் பாராட்டினர். எதிர்காலத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எம்.பிரதீபன், திரு.கே.ஸ்ரீமோகனன் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவகங்கா சுதீஸ்னர் ஆகியோர் கலந்துகொண்டனர்.