Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th April 2021 08:27:09 Hours

யாழ்ப்பாண கொவிட் -19 முன்னேற்றங்கள் குறித்து மதிப்பீடு

யாழ்ப்பாண மாவட்ட கொவிட் -19 ஐக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தலைமையில் கொவிட் - 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு மாநாடு 2021 ஏப்ரல் 24ம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைப்பெற்றது.

ஆரம்பத்தில், பொது மக்களின் அலட்சியம் காரணமாக யாழ்ப்பாணத்தில் தற்போதைய கொவிட் -19 நிலைமை மோசமடைந்து வருவதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார், அதைத் தொடர்ந்து, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தற்போதைய நிலைமை குறித்து புள்ளிவிபரத் தரவை முன்வைத்து, அரசாங்கத்தின் புதிதாக அமல்படுத்தப்பட்ட விதிமுறைகள் குறித்து கூட்டத்திற்கு விளக்கினார்.

கலந்துரையாடலின் போது, பிற சுகாதார நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கொவிட் - 19 குறித்து தங்கள் கவலைகளை எழுப்பினர், மேலும் தளபதி நிலைமையைத் தணிக்க பாதுகாப்புப் படைகள் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

மாவட்ட செயலாளர் திரு கனபதிபிள்ளை மகேசன், உதவி மாவட்ட செயலாளர் திரு. எம்.பிரதீபன், யாழ்பாண பிரதம பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன்துறை பிரதம பொலிஸ் அத்தியட்சகர் கடற்படை அதிகாரிகள், யாழ்பாண சுகாதார சேவைகள் அதிகாரி வைத்தியர் சத்தியமூர்த்தி, சில சுகாதார சேவைகளின் தலைவர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மாநாட்டில் லந்து கொண்டனர்.