Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st February 2024 18:59:15 Hours

யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி அதிகாரவாணையற்ற அதிகாரி 1 ஏகே இராமநாதன் (ஓய்வு) அவர்களுக்கு அஞ்சலி

யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் 25 ஜனவரி 2024 அன்று நோய் காரணமாக காலமான அதிகாரவாணையற்ற அதிகாரி 1 ஏகே இராமநாதன் (ஓய்வு) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி வீர்ரான அதிகாரவாணையற்ற அதிகாரி 1 ஏகே இராமநாதன் (ஓய்வு) அவர்கள் நாட்டின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்து 1980 இல் ஓய்வு பெற்றார். இலங்கையின் நல்லிணக்கம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை நிலைநாட்டுவதில் அவர் தனது வாழ்க்கை முழுவதும் முக்கியப் பங்காற்றினார். அவரது தளராத சேவைக்கு மரியாதை செலுத்தும் முகமாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் மலர் வளையம் அனுப்பி தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

அதிகாரவாணையற்ற அதிகாரி இராமநாதன் ஐந்து குழந்தைகளின் அன்பான தந்தையாவதுடன் தனது குடும்பத்திற்கும் தனது நாட்டிற்கும் அவர் அர்ப்பணித்ததற்காக நினைவுகூரப்படுவார். யாழ்ப்பாணம் புத்தூரில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது நினைவாக இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.