Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th February 2024 19:09:41 Hours

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி 14 வது படைப்பிரிவிற்கு விஜயம்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.டப்ளியூ.எம் பெர்னாண்டோ டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் 14 வது காலாட் படைபிரிவு தலைமையகத்திற்கும் அதன் கட்டளை பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்கு 12 பெப்ரவரி 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

விஜயம் மேற்கொண்ட மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்களை 14 வது காலாட் படைப்பிரிவு தளபதி,பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் அன்புடன் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தில் வரவேற்றனர். அதன்பின்னர், படைப்பிரிவு தளபதி வருகை தந்திருந்த மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதிக்கு அந்தந்தப் பகுதிகளின் பணி, வகிப்பங்கு மற்றும் தற்போதைய நிலைமை குறித்து விளக்கினார்.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி தனது விஜயத்தின் போது 141 வது காலாட் பிரிகேட், 142 வது காலாட் காலாட் பிரிகேட், 144 வது காலாட் பிரிகேட், 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது படையினருக்கு உரையாற்றிய மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி, படையினரின் ஒழுக்கம், மனித முகாமைத்துவம் மற்றும் பதட்டமான சூழ்நிலையில் எவ்வாறு கடமைகளைச் செய்வது, முகாம்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், கடந்த கால மற்றும் தற்போதைய சூழ்நிலைகளில் தங்களின் சாத்தியமான சேவையை வழங்கிய படையினரின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார்.

இந்த விஜயத்தின் போது 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச்.பண்டாரநாயக்க யூஎஸ்பீ, பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த விஜயத்தின் போது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு சென்றிருந்தனர்.