20th February 2024 15:45:15 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் திங்கட்கிழமை (பெப்ரவரி 19) 61 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியை 61 ஆவது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளுடன் இணைந்து வரவேற்றதுடன் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் பங்கு, பணிகள் மற்றும் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து விரிவான விளக்கங்களை அந்தந்த படைப்பிரிவு, பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளிடமிருந்து கேட்டறிந்து கொண்டார். 612 வது காலாட் பிரிகேட் மற்றும் 613 வது காலாட் பிரிகேட் படையினருடன் கலந்துரையாடுவதற்காக அவர் தனது விஜயத்தை 612 மற்றும் 613 வது பிரிகேட்கள் வரை நீட்டித்ததுடன், அவர் அனைத்து இடங்களிலும் படையிருக்கு உரையாற்றினார்.
இந்த விஜயத்தின் போது 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.