Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2024 20:54:14 Hours

மேஜர் ஜெனரல் டிஎஸ்கே விஜேசூரிய (ஓய்வு) அவர்களுக்கு இறுதி இராணுவ மரியாதை

35 வருடங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றிய இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டிஎஸ்கே விஜேசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் இராணுவ இறுதி மரியாதை புதன்கிழமை (பெப்ரவரி 21) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் அவரது இராணுவ தோழர்கள் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

அந்தி சாயும் போது மறைந்த அதிகாரிக்கு வணக்கம் செலுத்த ஓய்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரிகள், முதன்மை பணிநிலை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய நண்பர்களும் கலந்துகொண்டனர்.

இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய படையினர் பூதவுடலை தாங்கிய பேழையினை பெற்று, தேசியக் கொடி போர்த்தி துப்பாக்கி வண்டியில் வைப்பதற்கு முன்பு மயானத்தின் நுழைவாயிலில் ஆயுத மரியாதை வழங்கினர்.

இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஸ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் சவப்பெட்டியை முறையாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் சவப்பெட்டியின் பின்னால் அணிவகுத்து சென்றனர்.

இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களினால் வெளியிடப்பட்ட முறையான விசேட கட்டளை பகுதி I துக்கத்தில் இருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய படையினர் இறந்தவருக்கு வணக்கம் செலுத்தியதுடன், அடையாள துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது. இது ஒரு இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி இதுவாகும்.

இறுதி வாசிப்பின் சில நிமிடங்களுக்குப் பிறகு, புகழ்மிகு வீர்ர் அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பலுடன் தேகம் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர், பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ அவர்களால் மறைந்த இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டிஎஸ்கே விஜேசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பெற்றுக் கொண்ட அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. இந்த கடமையானது ஆயுதப்படையில் ஒரு பொதுவான பாரம்பரியமாகும்.

சிரேஸ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மேஜர் ஜெனரல் டிஎஸ்கே விஜேசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட சிறப்பு கட்டளை 1 பின்வருமாறு;