Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th May 2021 21:33:30 Hours

மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே 11வது படைப்பிரிவின் புதிய தளபதியாக பதவியேற்பு

குண்டசாலையில் அமைந்துள்ள 11வது படைப்பிரிவின் 11வது தளபதியாக மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே வெள்ளிக்கிழமை (7) பொறுப்பேற்றார்.

அன்றைய தினம் முதலில் புதிய 11வது படைப்பிரிவின் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை 10 வது கஜபா படையினரால் வழங்கப்பட்டதுடன் பின்னர் அவரை சிரேஸ்ட அதிகாரிகளினால் வரவேற்று தலைமையக வளாகத்திற்கு செல்லப்பட்டார்.

மகா சங்கத்தினரின் உறுப்பினர்களால் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே தனது பதவிறே்பிக்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் கையொப்பமிட்டார். பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகளுடன் அதிகாரப்பூர்வ புகைப்படம்எடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்து மற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரை என்பவற்றில் கலந்துக் கொண்டார். கொவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக புதிய தளபதியின் அறிவுறுத்தல்களின்படி, அணிவகுப்பு மரியாதை உட்பட சில இராணுவ சம்பிரதாயங்கள் குறைக்கப்பட்டன.

மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே, இந்த புதிய நியமனத்திற்கு முன்னர், யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52வது படைப்பிரிவின் பதவி வகித்தார். 11 வது படைப்பிரிவின் தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சாரத சமரகோன் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகேவின் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.