06th December 2023 20:22:20 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரின் ஆலோசனைப்படி 591 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ்.என்.எம்.ஏ.பி அரம்பேபொல ஆர்டபிள்யூபீ அவர்களின் ஆதரவுடன் முல்லைத்தீவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பொதுமக்களுக்கு, பழைய 593 வது காலாட் பிரிகேட் வளாகத்தில் நடமாடும் கண் பரிசோதனை முகாம் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது 591 வது காலாட் பிரிகேட் படையினர் திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இலவச சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கினர்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் நிஷ்மா ராஸீக் மற்றும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய இரு வைத்தியசாலைகளின் வைத்தியக் குழுவினால் நிர்வகிக்கப்பட்ட இந்த மருத்துவ சிகிச்சையானது காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை தொடர்ந்தது.
வவுனியா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சர்வேஸ்வரம் வழங்கிய அனுசரணை மற்றும் மருத்துவக் குழுவின் ஒருங்கிணைப்பில் குறைந்த வருமானமுடைய பிரதேச மக்களின் நலன் கருதி இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடமாடும் மருத்துவ முகாமானது, தகுதியான நோயாளிகளை பரிசோதித்து வவுனியா வைத்தியசாலையில் 2023 டிசம்பர் 11 ஆம் திகதி கண்புரை சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கவே ஆகும்.
அதே திட்டத்தின் போது, நன்கொடையாளர் வழங்கிய அனுசரணையைத் தொடர்ந்து பார்வையற்ற பொதுமக்களுக்கு மூக்கு கண்ணாடிகளும் விநியோகிக்கப்பட்டன.
நடமாடும் இப்பரிசோதனை முகாமில் பாடசாலை மாணவர்களும் பார்வை பரிசோதனை செய்து கொண்டனர்.