Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2020 22:59:25 Hours

முதலாவது கெமுனு படையனி தலைமையகத்தில் புதிய கலந்துரையாடல் கூடம் திறந்து வைப்பு

தியதலாவையில் அமைந்துள்ள முதலாவது கெமுனு படையனி தலைமையகத்தில் புதிய கலந்துரையாடல் கூடம் இம் மாதம் 18 ஆம் திகதி கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதியும், இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

இந்த பழைய கட்டிடமானது முன்பு இராணுவ உளவுத்துறை அலுவலமாக பயன்படுத்தப்பட்டது. இந்த கட்டிடமானது முதலாவது கெமுனு படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் வை.ஆர்.ஐ திசாநாயக அவர்களது பாரிய ஒத்துழைப்புடன் நவீனமுறையில் இந்த கலந்துரையாடல் கூடம் முழுமையாக நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.

இந்த திறப்பு விழா நிகழ்வில் முதலாவது கெமுனு படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Sneakers | Men's Footwear