09th February 2024 13:17:30 Hours
மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் 03 அதிகாரிகள் மற்றும் 14 அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன் இலங்கை இராணுவ விசேட படையணியின் படையினருடன் ஐந்தாவது கூட்டுப் பயிற்சி மாதுரு ஓயாவிலுள்ள விசேட படையணிப் பயிற்சிப் பாடசாலையில் 2024 பெப்ரவரி 01 ஆம் திகதி ஆரம்பமானது. இப்பயிற்சி மார்ச் 9 ஆம் திகதி நிறைவடையும்.
பிராந்திய இராணுவ ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க தடையங்களை குறிக்கும் கூட்டுப் பயிற்சித் திட்டம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் விசேட படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
பயிற்சி நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.