Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2021 16:50:15 Hours

மாத்தளையில் நடைபெற்ற கொவிட் - 19 தடுப்புக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்

கொவிட் -19 தொற்று நோயைத் தடுப்பதற்கான மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு மாநாடு வெள்ளிக்கிழமை (30) மாத்தளை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 53 வது படைப்பிரிவு தளபதியும் மாத்தளை மாவட்ட கொவிட் ஒழிப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே கலந்துக் கொண்டார்.

மாத்தளை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நாலக்க கொடஹேவா மற்றும் இதர பங்குதாரர்களுடன் விரிவாக கலந்தரையாடப்பட்டதுடன் அத்தியவசிய உணவு தேவைகள் விவசாய உற்பத்திகளின் விநியோகம், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொதி விநியோகம், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தொடர்ச்சியான சேவை வழங்கல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தடுப்பூசி வழங்கல் நிலை, தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள், சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல், பி.சி.ஆர் / ஆன்டிஜென் பரிசோதனைகள் நடத்துவதன் முன்னேற்றம் மற்றும் வைரஸ் பரவுவதைக் குறைக்க சரியான வழிமுறையை செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பொலிஸ், அரச மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டத்தின் போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிற விடயங்கள் ஆகும்.

கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பது தொடர்பான விடயங்களைப் பற்றி கலந்துரையாடலில் மேலும் பல அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களும் கலந்து கொண்டனர்.