Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th October 2017 17:14:26 Hours

மாங்குளத்தில் 57 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்த கடின பெரஹர

மாங்குளம் ஸ்ரீ சுகத விகாரையில் கடின பெரஹர நிகழ்வு ஒக்டோபர் மாதம் 6-7 ஆம் திகதிகளில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாடுடன் இடம்பெற்றது.

மாங்குளம் சுகதா விகாரையின் விகாராதிபதியான ஹிகுரன்கன்டே சுமன தேரரின் மத வழிபாடுகளுடன் இந்த கடின பெரஹர நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த பெரஹர 57 ஆம் படைப் பிரிவு மற்றும் 574 ஆவது படைத் தலைமையகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

இந்த கடினபின்கம பெரஹரவிற்கு 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, 574 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் சந்தன சோமவீர அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பெரஹரவிற்கு மாங்குளம் சுகதா விகாரையின் விகாராதிபதியான ஹிகுரன்கன்டே சுமன தேரரின் அழைப்பிற்கேற்ப முவத்தகம் ஆனந்த தேரரும் இந்த பெரஹரவிற்கு வருகை தந்தார். பின்பு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பன்னிபிடியில் அமைந்துள்ள சரஸ்வதி கலாச்சார மண்டபத்தின் அனுசரனையுடன் இந்த கடின பெரஹர மற்றும் தானங்கள் வழங்கப்பட்டன.

Mysneakers | Nike Air Max 270