Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2021 18:50:02 Hours

மற்றொரு ஏழை குடும்பத்திற்கு புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

கிழக்கு பக்மீகம துசிதபுரவில் வசிக்கும் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீட்டைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா சுகாதார முறைகளுக்கு அமைவாக வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.

22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா மற்றும் 221 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியந்த காரியவசம் ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் 6 வது இலங்கை கவச வாகனப் படையின் படையினரால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியாவில் வாழும் தாராள நன்கொடையாளர்களான திரு நிஹால் சூரியகே, திரு தமித் கஹாவே மற்றும் திரு சமன் மாரசிங்க ஆகியோரின் நிதியுதவியில் குறித்த கட்டுமானத்தினை இராணுவத்தினர் மேற்கொள்ளவுள்ளனர்.

221வது பிரிகேட் தளபதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் 6 வது இலங்கை கவச வாகனப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர்.ஹசந்த, சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.