02nd April 2024 14:48:41 Hours
மாங்குளம் பாளைகொளனி பிரதேசத்தில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கு வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 28 மார்ச் 2024 அன்று இடம்பெற்றது.
642 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் 5 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி படையினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.5 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி படையினரால் மேற்கொள்ளும் கட்டுமான பணிக்கு அப்பகுதி கிராமவாசிகள் மற்றும் வணிகர்கள் நிதியுதவி வழங்கினர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஜிபீ.பீ குலதிலக்க அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 5 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.