Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th January 2019 10:33:58 Hours

மன்னார் பிரதேசத்தில் இராணுவத்தினரது உதவியுடன் பாடசாலை உபகரணங்கள் விநியோகம்

தகவல் தொழில் நுட்ப கொழும்பு பிஎல்சி பவுர்ஷ் கம்பனி ‘அத்வெல்ல’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கொண்டச்சி மற்றும் சிலாவத்துரை பிரதேசங்களில் 22 ஆவது கஜபா படையணியின் ஒத்துழைப்புடன் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பு செய்தனர்.

54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் செனரத் பண்டார அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து இந்த பாடசாலை உபகரணங்களை இந்த மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த நிகழ்வு 542 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஐ.எச்.எம்.ஆர்.கே ஹேரத் அவர்களது பூரண ஏற்பாட்டுடன் இடம்பெற்றது.

அத்துடன் டிசம்பர் 30 ஆம் திகதி கொழும்பு ஹற்றன் நெஷனல் வங்கியின் அனுசரனையில் வழங்கப்பட்ட பாடசாலை பைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் 170 மாணவர்களுக்கு பௌத்த மதகுருவான அம்பஹகவெவ சரணகீர்த்தி தேரர் மற்றும் படைத் தளபதியினால் மாணவர்களுக்கு மன்னார் நகரத்தில் வழங்கப்பட்டது. Sport media | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret