27th December 2023 20:08:40 Hours
15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 31வது ஆண்டு நிறைவு விழா, கோப்பாயில் உள்ள அதன் தலைமையகத்தில் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய 25 டிசம்பர் 2023 அன்று நடைபெற்றது.
15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.எம்.சி சமரசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் யாழ். வரலாற்று சிறப்புமிக்க நாக விகாரையின் பிரதமகுருவான வண. மீகஹஜந்துரே சிறிவிமல தேரரால் நடாத்தப்பட்ட தர்ம போதனையில் படையினர் பங்குபற்றினர்.
படையினர் 24 டிசம்பர் 2023 அன்று பௌத்த தேரர்களுக்கு 'சங்கீக தானம் வழங்கியதுடன், ஆண்டு நிறைவு நாளில் (டிசம்பர் 25) 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் கட்டளை அதிகாரிக்கு பாரம்பரிய மரியாதை வழங்கினர்.