Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2018 14:56:50 Hours

மத்திய பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் சிரமதான பணிகள்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் தியதலாவை நகரப் பகுதிகளில் 150 இராணுவ படை வீரர்களது பங்களிப்புடன் (11) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஹப்புத்தள வயி சந்தியில் இருந்து தியதலாவை மினிந்தோரு சந்தி, தபால் நிலை சந்தி மற்றும் தியதலாவை இராணுவ எகடமி பிரதான நுழைவாயில் வரைக்கும் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகளில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கிழ் இயங்கும் இராணுவ கட்டளை பயிற்சி முகாம், தொண்டர் படையணி பயிற்சி முகாம், 7 ஆவது சமிக்ஞை படையணி, 1 ஆவது கெமுனு காலாட் படையணி, 7 ஆவது இராணுவ பொலிஸ் படையணி, 17 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணி, 8 ஆவது இராணுவ சேவைப் படையணி மற்றும் 2 (தொ) இராணுவ மின்சார பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த படை வீரர்கள் பங்கேற்றினர். latest Running Sneakers | Nike Off-White