Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2020 19:04:54 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்கள் இம் மாதம் (21) ஆம் திகதி 7 ஆவது இராணுவ பொலிஸ் படையணி தலைமையகம் மற்றும் 8 ஆவது இராணுவ சேவைப் படையணிகளுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த படையணி தலைமையகங்களுக்கு வருகை தந்த படைத் தளபதியை கட்டளை அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் படைத் தளபதி அவர்களினால் இந்த தலைமையக வளாகங்களில் மரக்கன்றுகள் நாட்டி இறுதியில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார். best Running shoes | Nike