Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th February 2024 10:30:50 Hours

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் கள விஜயம்

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2024 பெப்ரவரி 06 முதல் 08 வரை 12 வது காலாட் படைப்பிரிவிற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது அவர் புனித ருஹுனு மகா கதிர்காமம் ஆலயம் மற்றும் கிரிவெஹர விகாரை ஆகியவற்றில் வழிப்பாட்டில் ஈடுபட்டதுடன் தளபதி, 12 வது காலாட் படைப்பிரிவு, 12 வது கஜபா படையணி, ஹம்பாந்தோட்டை துறைமுகம், 18 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 121 வது காலாட் பிரிகேட் ஆகியவற்றிற்கு விஜயம் செய்தார்.

உத்தியோகபூர்வ விஜயத்தின் போது 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 121 மற்றும் 122 வது காலாட் பிரிகேட் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பாதுகாப்பு படை தலைமையக தளபதியுடன் உடனிருந்தனர்.