Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th December 2021 10:51:13 Hours

பௌத்த பிக்குவின் அனுசரனையில் இராணுவத்தினாரல் புதிய வீடு பரிசளிப்பு

இராணுவத் தலைமையகத்தின் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் கொழும்பு சர்வதேச விபாசனா தியான நிலையத்தின் பௌத்த பிக்கு வண. உடுதும்பர சோபித தேரரின் அனுசரணையில் சாஸ்திரிகுளம் பொதுப் பகுதியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் சாவி பயனாளிக்கு வன்னிப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாமபக்க ரணசிங்க அவர்களினால் புதன்கிழமை (1) கையளிக்கப்பட்டது.

இந்த வீட்டின் நிர்மாண பணிகள் வன்னி பாதுகாப்பு படை தலைமையத்தின் 56 வது படைப்பிரிவின் 562 வது பிரிகேடின் 15 வது (தொ) இலங்கை சிங்க படை சிப்பாயிகளினால் மேற்கொள்ளப்பட்டது. பயனாளியான திரு கோவிந்த சாந்த வடிவேல் அவர்கள் மற்றும் அவரின் குடும்பத்தாரின் பங்கேற்புடன் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் 562 வது பிரிகேட் தளபதி எஎம்எஸ் பிரேமவன்ச அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு 56 வது படைப்பிரிவு தளபதியவர்களின் மேற்பார்வையில் 15 வது (தொ) இலங்கை சிங்க படை சிப்பாயிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாழ்வாதாரத்திற்கு வழியின்றி இன்னல்களை எதிர்கொண்டிருந்த பயனாளி குடும்பத்திற்கு அவசியமான அத்தியவசிய பொருட்களும் மேற்படி நிகழ்வில் அன்பளிப்பு செய்யப்பட்டது.

வண.லக்ஷேகம விமலரத்தன தேரர், ஆர்ஆர் கட்டுமான நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி திரு மைக்கல், சேப்டி கிரடிட் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு மௌரதன் வவுனியா அபிவிருத்தி உத்தியோகத்தர், சாஸ்திரிகுளம் பிரதேசத்தின் சமூர்த்தி உத்தியோகத்தர், 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி பெரேரா, 562 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏ.எம்.எஸ்.பிரேமவன்ச, 15 வது (தொ) இலங்கை சிங்க படையின் கட்டளை அதிகாரி ஆர்.எம்.ஜே.பி. ராஜபக்ஷ உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் இந்நிகழ்வில் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.