Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2022 20:15:28 Hours

பௌத்த பிக்குகளின் அனுசரனையில் முல்லேரியா தெற்கில் வசிப்பவர்களுக்கு மேலும் நிவாரணப் பொதிகள்

முல்லேரியாவ தெற்கு, தொடங்கஹஹேன, மதின்னாகொட மற்றும் எல்ஹேன ஆகிய பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 144 வது பிரிகேடின் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணிப் படையினரின் ஒருங்கிணைப்பில் புகழ்பெற்ற தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூரின் டென் நாக் பூய் மற்றும் கீ மெங் லெங் (Tan Ngak Buay & Kee Meng Lang) அறக்கட்டளை இணைந்து 500 க்கும் மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வு 04 கிராமசேவை பிரிவுகளை உள்ளடக்கிய மதின்னாகொட சுரம்யாராமய விகாரையில் சனிக்கிழமை (6) 144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.எம்.வி கொடிதுவாக்கு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 144 வது பிரிகேட் மற்றும் 2 வது (தொ) இலேசாயுத காலாட்படையின் இராணுவ வீரர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.

தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளையின் வண. தலகல சுமணரதன நாயக்க தேரர் பங்குபற்றிய இந்த வழங்கல் நிகழ்வில் 14 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ரொஷான் ஜயமான்ன, 144 வது பிரிகேட் தளபதி, 2 வது (தொ) இலேசாயுத காலாட்படை படையினர் மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.