Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th February 2024 10:41:50 Hours

பொறியியல் படைப்பிரிவின் தளபதி 16 வது பணிமனைக்கு விஜயம்

பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2024 ஜனவரி 29 ம் திகதியன்று மத்தேகொடவில் உள்ள 16 வது பணிமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை 16 வது பணிமனை கட்டளை அதிகாரி அன்புடன் வரவேற்றதைத் தொடர்ந்து படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. வரவேற்பைத் தொடர்ந்து, படைப்பிரிவு தளபதிக்கு கட்டளை அதிகாரியினால் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டது.

அவரின் வருகையின் அடையாளமாகவும் செழுமைக்கான அடையாளமாகவும் மாங்கன்று நட்டுவைத்தார். இறுதியில் படையினருக்கு உரையாற்றிய அவர் அவர்களின் கடமையில் உறுதியான அர்ப்பணிப்புக்காக ஊக்கம் மற்றும் இதயப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவித்தார். அவர் புறப்படுவதற்கு முன் அதிதிகள் பதிவேட்டில் பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார்.

இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.